நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாணவி ஒருவர் புறக்கணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அப்போது ஆளுநர் ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மேட்டையில் நின்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநர் ரவி, பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
அப்போது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நாகர்கோவில் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஜீன்ஸ் ஜோசப் என்கிற மாணவி ஆளுநர் ஆர்.என். ரவியை புறக்கணித்தார். ஆளுநரிடம் பட்டத்தை பெற்றுக் கொள்ளாமல் நேரடியாக அவருக்கு அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்டார். அருகில் வந்து நிற்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்த போதும் மேடையிலேயே மாணவி அதனை நிராகரித்துவிட்டு கீழே இறங்கி சென்றிருக்கிறார். ஆளுநரை மாணவி பட்டமளிப்பு விழாவில் புறக்கணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.