ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79 வது சுதந்திரதின விழா நாடெங்கிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது
வழக்கம்.
திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் தமிழக ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒன்றிணைந்து நடைமேடை, ரயில் பெட்டிகளில் மற்றும் பயணிகள் ஓய்வு அறைகளில், பார்சல் அரைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் சோதனைக் கருவிகள் உதவியுடன் பயணிகள் உடைமைகள் மற்றும் லக்கேஜ்களை தீவிர சோதனை மேற்கொண்டனர்.