திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சி பகுதியில் மகாலிங்கம் (74) என்பவர் வீட்டில் வராண்டாவில் அமர்ந்திருந்தபோது முகமூடிகள் அனைத்து நபர்கள் ஆயுதத்துடன் சென்று அவர்களைத் தாக்கி அவரது மனைவி கமலவேணி அணிந்திருந்த 6பவுன் தங்கச்சி மற்றும் மகாலிங்கம் வைத்திருந்த 5000 ரூபாய் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து பிச்சையம்மாள் மற்றும் அவர்கள் குழந்தைகளை கட்டிப்போட்டுவிட்டு வீட்டிலிருந்து ஒன்பதரை சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். தொடர் புகாரனைத் தொடர்ந்து குற்றங்கள் நடப்பதை தடுக்கும்
வகையில் திருச்சி மாவட்ட எஸ்பி நாகசெல்வரத்தினம் தலைமையில் போலீசார் அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது துவரங்குறிச்சி பகுதியில் தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமாக டூவீலரில் வந்த நபர்களை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் குட்டி என்ற சங்கப்பிள்ளை என்னை தெரிந்து வந்தது. தொடர்ந்து விசாரணை செய்த போது கூட்டாளிகளுடன் சேர்ந்து புத்தாநத்தம் துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான ஹரிகரன், பாலமுருகன், ஸ்ரீராம், அரவிந்த், கரன்குமார், முகேஷ் குமார், சுபாஷ்சந்திரபோஸ். அழகேசன், தர்மராஜ், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அவர்கள் துவரங்குறிச்சி பகுதியில் கொள்ளையடித்த 6சவரன் தங்க நகைகள் வெள்ளி கொலுசு மற்றும் இருசக்கர வாகனங்கள் இதே போல் புத்தாநத்தம் பகுதியில் கொள்ளை அடித்த தங்கத்தோடு 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் குரங்கு தொப்பிகள் கையுறைகள் பட்டாக்கத்திகள் நைலான் கயிறுகள் செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.