Skip to content

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

  • by Authour

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர்    டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக  போர் தொடங்கி உள்ளது. இந்தியாவை வெறுப்பேற்றும் வகையில் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில், ஐ.நா பொதுச் சபையின் 80-வது பொதுக் கூட்டம் செப்டம்பர்  மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது. பொது விவாத நிகழ்ச்சி செப். 23 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

 அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நாளை சந்திக்கிறார்கள். இதில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படும்.
புடின், டிரம்ப் சந்திப்பை தொடர்ந்து  உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்பட்டால், இந்தியா, அமெரிக்கா இடையே  சுமூகமான உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதில் ஒருவேளை  சுமூக  உறவு ஏற்படாவிட்டால்,  அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா, அல்லது சந்திக்காமல் திரும்புவாரா என்பது   உலக தலைவர்களால் உற்று கவனிக்கப்படுகிறது.

 

error: Content is protected !!