Skip to content

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.

அதன் தொடர்ச்சியாக வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பணம் அலங்காரம் செய்யப்பட்டு ஆலையம் முழுவதும் வளையல் தோரங்களால் கட்டப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.

அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வேம்பு மாரியம்மன் தனலட்சுமி பணம் அலங்காரத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது .

error: Content is protected !!