Skip to content

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மீனு குரியன் என்ற மீனு முனிர். மலையாள திரைப்பட நடிகையான இவர், 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை  சென்னைக்கு அழைத்து வந்தார். சினிமா சான்ஸ் வாங்கி தருவதாக அழைத்து வந்த மீனு, அந்த சிறுமியை  அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு  அழைத்து வந்தார்.

அங்கு 5 ஆண்கள் இருந்தனர். அவர்களுக்கு  அந்த சிறுமியை மீனு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஒருவர் அந்த சிறுமியின் கன்னத்தை கிள்ளினார். இன்னொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்தார். நிலைமையை அறிந்த அந்த சிறுமி அந்த கும்பலிடம் இருந்து தப்பி கேரளாவுக்கு சென்று விட்டார்.  இந்த சம்பவம் நடந்து 10 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் அந்த சிறுமிக்கு தற்போது திருமணம் ஆகி விட்டது.

கடந்த ஆண்டு தனது கணவரிடம்  சென்னையில் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து  கணவர் அனுமதியுடன் கடந்த 2024-ம் ஆண்டு எர்ணாகுளம் மூவாட்டு புழா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் அந்த வழக்கை சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கை மாற்றினர்.

அதைத்தொடர்ந்து  திருமங்கலம் மகளிர் போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். கேரளா சென்று நடிகை மீனுவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். நடிகை மீது  போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  தற்போது  10 வருடத்துக்கு முன்  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் யார், என்ன நோக்கத்தோடு சிறுமியை அழைத்து வந்தார் என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.  2ம் நாளாக  அவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சிறுமிக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!