சுதந்திரதினத்தன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சேர்மன் மேகலா முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கரு. முருகேசன் பங்கேற்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர். பல தீர்மானங்கள் படிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஊராட்சி செயலாளர் கருப்பையா அனைவரையும் வரவேற்று பேசினார்.
