இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சியின் முக்கிய அரசு கட்டிடங்கள் அனைத்தும் தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் மின் விளக்குகளால் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், திருச்சி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய அடையாளக் கட்டிடங்கள், மாலையிலிருந்து மின்னும் மூவண்ண ஒளியால்
கண்கவர் தோற்றமளித்தன. பொதுமக்கள், பண்டிகை போல் மிளிரும் இந்த ஒளி அலங்காரங்களை ரசித்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். தேசப்பற்று உணர்வையும் தேசிய ஒற்றுமையையும் ஊட்டும் இந்த வண்ணமயமான அலங்காரங்கள், திருச்சியின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சிறப்பூட்டின.