கரூர் மாநகராட்சி பகுதியில் கலங்கரை விளக்கம் எனும் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ரூ 800 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நிர்வாக அனுமதிக்கான ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வி செந்தில் பாலாஜி கூறினார்
கரூர் மாநகராட்சி உட்பட்ட மண்டலம் 3 மற்றும் 4 பகுதியில் இன்று ரூ 9.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிறைவேற்றுப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் வி செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்…. கரூர் மாநகராட்சி பகுதியில் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை மற்றும் புதிய குடிநீர் பணிகளுக்கு 800 கோடி ரூபாய்
மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்கப்பெற்று அந்த பணிகளும் தொடங்கும்.
ஏற்கனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ 328 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய்கள், சாலைகள், உள்ளிட்ட பல்வேறு மக்கள் அடிப்படை வசதி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாம சுந்தரி, மேயர் கவிதா , துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்….