திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் மதிமுக சார்பில் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. அதற்காக சிறுகனூர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறுகனூரில் மாநாடு நடைபெற உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் .அங்கு மேற்கொள்ள உள்ள பணிகள், மேடை அமைப்பது உள்ளிட்டவை குறித்து கட்சியினரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அக்கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ ,துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா,மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு
- by Authour
