அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மா.
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சின்னம்மா ஆவார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.