Skip to content

கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடி தொழிலாளியை முதலை கடித்து படுகாயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(55). மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினரான இவர் ஆறுகளில் விசிறு வலை வீசி மீன்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவரைப் போன்று இப்பகுதியில் 25 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜெயராமன் மட்டும் தனியாக சென்று சித்தமல்லி அருகே திம்மாபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இடுப்பளவு ஆழத்தில் விசிறு வலை வீசி மீன் பிடித்துள்ளார். அப்போது, திடீரென்று முதலை ஒன்று ஜெயராமனின் வலது கையை கடித்து இழுத்தது, படுகாயம் அடைந்த ஜெயராமன் முதலையிடம் இருந்து தப்பித்து கரையேறினார். அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு, அவருக்கு கையில் 7 இடங்களில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!