மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அ டி. அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90 டிஎம்சியாக உள்ளது. அணையில் 117.5 அடி தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் கர்நாடத்தில் உள்ள கபினி, கே. ஆர்.எஸ் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 95 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் இன்று நள்ளிரவு மேட்டூர் அணை வந்தடையலாம். அப்படி வரத்தொடங்கினால், மீண்டும் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் மேட்டூர் அணை 4 முறை நிரம்பி உள்ளது. நாளை நள்ளிரவில் 5முறையாக மேட்டூர் அணை நிரம்பு என அதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது
- by Authour
