சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கை எலும்பில் அடிபட்டிருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர். இன்று சிகிச்சை முடிந்து துரை.முருகன் வீடு திரும்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை துரைமுருகன் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். அப்போது அவருடன் அமைச்சர் எ.வ வேலுவும் உடிருந்தார்.