துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவத தொடர்பாக டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். கார்கே தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
இதற்கிடையே திமுக அல்லது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்துவது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியனாது. இந்த நிலயில் திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளர் என தகவல் வெளியானது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தான் வேட்பாளா் என்றும் தகவல் கசிந்தது. இதைத்தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்தியா கூட்டணி வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குறிப்பாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது.