துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர் வரும் 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்கு வரும்படியும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
