Skip to content

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி  பிரசாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி திடீரெ டென்ஷன் ஆனார். திமுக அரசு  கூட்டத்திற்க இடையூறு செய்ய வேண்டுமென்றே கூட்டத்திற்குள் ஆம்புலன்சை அனுப்பி வைத்துள்ளது. அடுத்த முறை இப்படி ஆம்புலன்ஸ் வந்தால் டிரைவர் ஆ்ம்புலன்சில் செல்லும் நிலை ஏற்படும் என  மிரட்டியதுட் இதுபற்றி போலீசில் புகார் செய்யுங்கள் என்றும் கூறினார்.

இதற்கிடையே கூட்டத்தில் திரண்டிருந்த அதிமுகவினர் ஆம்புலன்சை தாக்கியதுடன், டிரைவரையும் தாக்கினர்.  இது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறும்போது அணைக்கட்டு மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளியை வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு  செல்வதற்காக சென்றபோது இந்த தாக்குதல் நடந்தது. இரவு 11.35 மணி அளவில் அந்த நோயாளி அடுக்கம்பாறை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

,இவ்வாறு அவர் கூறினார்.  ஆம்புலன்ஸ்  டிரைவரை மரட்டும் தொனியில் பேசிய  எடப்பாடிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்தார்.  எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல் விடுப்பது  அவர் வகிக்கும் பதவிக்குஅழகல்ல என்றார்.

.

error: Content is protected !!