Skip to content

உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  மதுரையில்  தொடங்கி வைத்தார்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்  25.8.2023 அன்று கலைஞர்  பிறந்த ஊராகிய திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தையும் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர்கள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வருகிறார்கள்.

நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட   விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 26.8.2025 அன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக 3.05 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தால்  பயனடைவார்கள்.

error: Content is protected !!