திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில் திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் சேதமானது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னர்.
