Skip to content

வெளிநாட்டு வேலை, திருச்சியில் ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கே.ஆத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சர்மா (22) .இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். பின்னர் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சியை அணுகினார். அங்கிருந்த ஆனந்தராஜ் என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 4 லட்சம் வாங்கியுள்ளார்.
பின்னர் வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட சர்மா பணத்தை திரும்ப கேட்டார். பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இது குறித்து சர்மா கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ஆனந்த ராஜ் மேலும் சிலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 16 லட்சத்து 70 ஆயிரம் பணம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் மேலும் சில வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

error: Content is protected !!