Skip to content

மசோதாக்ககளை கவர்னர் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிகூத்தாகிவிடும் -உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வர் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடர்ச்​சி​யாக மூன்​றாவது நாளாக நடந்​தது.

அதற்கு நீதிப​தி​கள், ‘‘அதற்​காக தொடர்ந்து எந்த காரண​மும் தெரிவிக்​காமல் கிடப்​பில் போட்​டால் அத்​துடன் எல்​லாம் முடிந்து விடு​மா, அதற்கு தீர்வு காண வேண்​டா​மா’’ என்​றனர். பதி​லுக்கு துஷார் மேத்​தா, ‘‘அரசி​யல் சாசன சட்​டத்​தில் இவ்​வாறு எந்த காலநிர்​ணய​மும் செய்​யப்​ப​டாத போது உச்ச நீதி​மன்​றம் அதில் குறுக்​கிட்டு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது. அது நாடாளு​மன்​றத்​தி்ன் பணி. அரசி​யல் ரீதியி​லான தீர்வு தான் சரி​யாக இருக்​கும். நாட்​டில் உள்ள அனைத்து பிரச்​சினை​களுக்​கும் உச்ச நீதி​மன்​றத்​தில் தீர்வு கிடைத்​து​வி​டாது. அத்​தகைய பிரச்​சினை​களுக்கு அரசி​யல் சாசன சட்ட ரீதி​யாகவே தீர்வு காண முடி​யும்’’ என்​றார்.

அதற்கு துஷார் மேத்​தா, சட்​ட​மியற்​றும் பணியை உச்ச நீதி​மன்​றம் மேற்​கொள்ள முடி​யாது. சட்​டப்​பேர​வை, அரசு நிர்​வாகம், நீதித்​துறை என ஒவ்​வொரு அமைப்​பு​களுக்​கும் ஒவ்​வொரு வித​மான பணி​கள் உள்​ளன. இவையனைத்​துமே அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பாது​காவலர்​களே. குடியரசுத் தலை​வரும், ஆளுநர்​களும் இப்​படித்​தான் செய​லாற்ற வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் இவர்​களின்
அதி​காரங்​களை நீதி​மன்ற பரிசோதனைக்கு உட்​படுத்த முடி​யாது. இதற்கு ஒரே தீர்வு அரசி​யல் சாசனத்தை திருத்​து​வது​தான். அது​வரை இந்த பிரச்​னைக்கு அரசி​யல் ரீதி​யாகத்​தான் தீர்வு காண வேண்​டும். ஆனால் உச்ச நீதி​மன்​றம் தனது சிறப்பு அதி​காரத்தை பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை திருத்த முடி​யாது, என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்கும் விவ​காரத்தை நீதி​மன்றவிசா​ரணைக்கு உட்​படுத்த முடி​யும். பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும். இந்த விஷ​யத்​தில் தமிழகம் மட்​டுமல்​லாது வேறு சில மாநிலங்​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களைத்​ தொடர்ந்​துள்​ளன’’ எனக்​கூறி இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை வரும்​ ஆக.26-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

 

 

error: Content is protected !!