Skip to content

கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

க‌ர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பெங்​களூரு நெரிசல் மரணங்​கள் தொடர்​பான விவாதம் நடை​பெற்​ற  போது துணை முதல்​வர் டி.கே. சிவகு​மார் பேசுகை​யில், ‘‘நமஸ்தே சதா வத்​சலே மாத்​ருபூமே” என்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பாடலை பாடி​னார். மேலும் அவர் “எ​திர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா​வும் நானும் ஒரு காலத்​தில் ஆர்​எஸ்​எஸ் சீருடை அணிந்து ஒன்​றாக செயல்​பட்​டோம். ஆனால் இப்​போது வேறு கட்​சிகளில் இருக்​கிறோம்​” என குறிப்​பிட்​டார். காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் ஆர்​எஸ்​எஸ் அமைப்பை கடுமை​யாக விமர்​சித்​து​வரும் நிலை​யில், அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் அந்த அமைப்​பின் பாடலை பாடி​யிருப்​பது காங்​கிரஸ் வட்​டாரத்​தில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

error: Content is protected !!