கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் சேர்ந்த தசரதன் ( 59 ) இவர் தேசிங்குவிடமிருந்து ரூபாய் 8 லட்சம் கடனாக பெற்றுள்ளார் இந்த நிலையில் அவர் தசரதனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்ற போது இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தசரதன் அவரை தகாத வார்த்தைகள் திட்டி தன் நாயை ஏவி விட்டு அவரை விரட்டி உள்ளார் இதில் தேசிங்கு கீழே விழுந்து காயமடைந்தார் இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
முருகன் கோவிலில் உண்டியல் திருட்டு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேல பஞ்சப்பூரை சேர்ந்தவர் பழனிசாமி . இவர் அப்பகுதியில் உள்ள முருகன் மற்றும் விநாயகர் கோயிலுக்கு தலைவராக உள்ளார் .இந்த நிலையில் கோவிலுக்கு சென்று பார்த்தபோது மர்ம நபர் கோயிலில் இருந்த உண்டியலை திருடிக் கொண்டு தப்பி ஓடியது தெரிய வந்தது இது குறித்து எடமலை பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயங்கி விழுந்த முதியவர் சாவு
திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி சேர்ந்தவர் ராமசாமி 69 இவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த மாவட்ட கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார் அப்போது திடீரென மயங்கி விழுந்தார் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார் இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.