Skip to content

அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. இதனை உணர்த்துகின்ற வகையில் இங்குள்ள தேர் சக்கரம் பொருததப்பட்டு குதிரைகள் இழுக்கும் தோற்றத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் தெரிவிக்கின்றன. கோதண்டராமசாமி கோயிலின் தேர், நிற்கும் இடத்தில் அருள்மிகு நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர் வெள்ளோட்டம் சமீபத்தில் நடைபெற்றது எடுத்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்களின் முயற்சியால் கிருஷ்ணன்

கோவில் பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. கிருஷ்ணர்
கோவிலில் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட தன்வந்திரி மற்றும் சக்கரத்தாழ்வார் சிலைகள் நேற்றுமாலை அருள்மிகுகோதண்டராமசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கிருஷ்ணன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இன்று காலை விக்னேஸ்வரன் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. முதல் கால யாக சாலை பூஜைகள் நிறைவேற்று பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இன்று மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நாளை காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை முடிந்தவுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுகிறது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேக திருவிழா ஒட்டி அரியலூர் நகரம் விழாக்கோலம் கொண்டுள்ளது.

error: Content is protected !!