மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் சைய்யது நகரைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினகரன்(45). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளும், கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளி நடராஜன் மகன் ஐயப்பன்(36) என்பவருக்குச்சொந்தமான இரண்டு பசுமாடுகள் மொத்தத்தில் ஐந்து பசுமாடுகள் வழக்கம்போல தைக்கால் பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. இந்நிலையில் நேற்று இரவு காற்றுடன் பெய்த மழையினால் ஒரு மின்கம்பம் முறிந்து கீழே விழுந்து மின்கம்பிகள் அருந்து கீழே விழுந்து கிடந்தன. இந்த மீன் கம்பிகள் மழைநீரில் கிடந்தன.இதில் மின்னோட்டம் இருந்து கொண்டிருந்தது. மின் கம்பிகள் கிடந்த பகுதிக்கு பசு மாடுகள் சென்றதால் மின்சாரம் தாக்கி ஐந்து பசு மாடுகளும் ஒவ்வொன்றாக துடி,துடித்து அதே இடத்தில் இறந்தன. அப்பகுதியில் வந்த ஒரு நாயும் மின்சாரம் தாக்கி இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் மின்சார வாரிய உதவிப் பொறியாளர் பிரதீப், விஏஓ சிவசங்கரி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த5 பசு மாடுகளின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி
- by Authour
