Skip to content

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

  • by Authour

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்கு திருட்டுக்கு எதிரான நடை பயணத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிகார் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கர்நாடகாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது,  மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில்  1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைக் கண்டித்து பீகார் மாநிலத்தில் அவர் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் காந்தி

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்தில் பங்கேற்கிறார். காலை 7.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற அவர், 10.30 மணிக்கு பீகார் சென்றடைகிறார். தொடர்ந்து  முதலமைச்சர் ஸ்டாலின், நடைபயணத்தில் பங்கேற்கிறார்.  ராகுல்காந்தி உடனான நடைபயணத்தில் பங்கேற்று விட்டு, பிற்பகல் 2.40 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

error: Content is protected !!