அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. கோதண்டராமசாமி கோயிலின் தேர்நிற்கும் இடத்தில் அருள்மிகு நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர் வெள்ளோட்டம் சமீபத்தில் நடைபெற்றதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை, நரசிம்மா டிரஸ்ட் மற்றும் பக்தர்களின் முயற்சியால் கிருஷ்ணன் கோவில் பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று காலை தொடங்கியது. கிருஷ்ணர் கோவிலில் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட தன்வந்திரி மற்றும் சக்கரத்தாழ்வார் சிலைகள் பீடத்தில் வைக்கப்பட்டு மருந்து
சாத்தப்பட்டது. பின்னர் யாகசாலையில் விக்னேஸ்வரன் பூஜையுடன் முதல் கால பூஜைகள் தொடங்கியது. இன்று காலை மூன்றுகால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. மேளதாளம் முழங்க கடம் மூலஸ்தான கோபுரத்தை அடைந்தவுடன் பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான அஅருள்மிகுநவநீத கிருஷ்ணன் கோவிலுக்கு நூறாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.