Skip to content

மகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை..

  • by Authour
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவிற்குட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்  ராஜா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ராஜாவிற்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஊரைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் இளம் வயது பெண்ணான உமா என்பவரை ராஜா,   இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு தற்போது  ஆறுவயதில் ஒரு மகன் உள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் வெளியூரில் தொழில் செய்து வரும் ராஜாவின் முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகனான ராசுக்குட்டி நேற்று சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் முதல் மனைவி ரேவதியுடன் தகராறு செய்த ராஜா அவரை தாக்கியதாக தெரிகிறது. தாய், தந்தை தகறாரை தடுக்க சென்ற ராசுக்குட்டிக்கும், ராஜாவுக்கும் மோதல் ஏற்பட இன்று காலை ராஜா கடப்பாரையை கொண்டு தனது மகன் ராசு குட்டி தலையில் பலமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்தராசு குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே கொலை செய்த ராஜா தனது இரண்டாவது மனைவி உமா மற்றும் குழந்தையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!