இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025 டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அவர் 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 91.51 மீட்டர் எறிந்து முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் மூன்று முறை எறிதல்களை (84.35 மீ., 82 மீ., 85.01 மீ.) பதிவு செய்தார், ஆனால் மற்ற மூன்று முயற்சிகள் பவுல் ஆனது. இது அவரது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாதனையாகும். நீரஜ் 2022 இல் டயமண்ட் லீக் கோப்பையை வென்றிருந்தார், ஆனால் இந்த முறை அவர் அதைத் தவறவிட்டார்.