தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில், விஜய் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என்று குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாகவும், அவரது பவுன்சர்கள் கட்சியினரை மனிதாபிமானமின்றி தூக்கி எறிந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது, மேலும் 2026 தேர்தலில் தவெகவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…
- by Authour
