Skip to content

மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்… ஜாய் கிரிஸில்டா புகார்

  • by Authour

நடிகரும், சமையல் கலைஞருமான  மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏறாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞராக இருந்து வரும் ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.  அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பல முக்கியஸ்தர்களின் இல்ல விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் சர்வீஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் என்கிற அளவிற்கு பாப்புலரான நபராகவும் இருந்து வருகிறார்.  ரங்கராஜுக்கு  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதி என்பவருடம் திருமணமாகி  இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே  பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்த மறுநாளே ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்தது  சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாகியது.  அதற்கு இன்ஸ்டகிராம் பதிவில் விளக்கமளித்திருந்த ஜாய் கிரிசில்டா, தாங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கணவன் மனைவியாக வாழத்தொடங்கி விட்டதாகவும், நாங்கள் இப்போது மிஸ்டர் & மிஸ்சஸ் ரங்கராஜ் என்றும் குறிப்பிடிருந்தார்.

அப்போது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே எப்படி இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஜாய் கிரிசில்டாவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார்.  இந்நிலையில் தற்போது  மாதம்பட்டி ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும்  தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!