திருச்சி மாநகராட்சி கூட்டத்திற்கு பின் மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவுன்சிலர் ஒருவர் என்னை பார்த்து மேயருக்கே தகுதி இல்லாதவர் எனக் கூறியது வருத்தமாக உள்ளது .குடிநீர் இணைப்பு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் பிளம்பர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினோம். திமுக மாமன்ற உறுப்பினர் சப்ஜெக்ட் மீது கேள்வி கேட்கலாம் . ஆனால் என் மீது தனிப்பட்ட வெறுப்பு இருப்பதால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். டெண்டர் முறைகேடு என்பது தவறான தகவல். ரூ.24 லட்சத்தை விட தற்போது 28 லட்சத்திற்கு கொடுத்துள்ளோம். மேயரை பிடிக்கவில்லை என்றால் அதிகாரி மற்றும் இன்ஜினியரிடம் கேட்க வேண்டும். மாமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை என்பது புதிதல்ல. இதற்கு முன்பு இருந்தவர்கள் மேயராக இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதைத்தான் நானும் செய்துள்ளேன். இவ்வாறு மேயர் அன்பழகன் கூறினார்.
முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்
- by Authour
