Skip to content

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அரியலூர் கலெக்டர் நேரில் பார்வை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், த.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.08.2025) நேரில் பார்வையிட்டார்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம். இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 02.08.2025 அன்று காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்றையதினம் அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்திற்குட்பட்ட தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டுத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 திருமண உதவிதொகைக்கான ஆணைகளையும், 01 பயனாளிக்கு ரூ.1,200 ஓய்வூதிய உதவித்தொகைக்கான ஆணையையும். 01 பயனாளிக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முகாமிற்கு வருகைபுரிந்த 05 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் சிறப்பு பிரிவு மருத்துவர்களான எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பொது மருத்தும் மற்றும் சர்க்கரை நோயியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பல் மருத்துவர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவர், தோல்நோய் மருத்துவம், இருதயவியல் மருத்துவர், கதிரியியல் மருத்துவர், ஆகியோர் இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் இரத்த பரிசோதனை சேவைகள் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாரிமுத்து, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மணிவண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட நிலை அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!