கோவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள கோவை மாவட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் ஒரு ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து, கோவிலுக்கு பூ பறிக்க சென்ற 90 வயது முதியவரை தாக்கியதில் அவர் இரண்டு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதால், யானை மீண்டும் வனப் பகுதியை நோக்கிச் சென்று விட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத் துறையினர், யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். முதியவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து, நரசிபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே போல யானை ஊருக்குள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை… காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்
- by Authour
