தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை… – 3 பேர் கைது
திருச்சி மேல பஞ்சப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது36). இவரது தந்தை ராஜு (வயது 65, ) சகோதரர் கார்த்திக் (வயது32. ) இவர்கள் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 39) அஞ்சலை (வயது45) மற்றும் ராமமூர்த்தி (வயது26) ஆகியோர் இடையே பொதுபாதை பயன்பாடு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29ந்தேதி ஜெயபால், அவரது தந்தை ராஜு மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் மாடுகளுக்கு இரு சக்கர வாகனத்தில் அந்த பொது பாதை வழியாக தண்ணீர் கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அஞ்சலை மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் ஜெயபால் கார்த்திக் மற்றும் அவரது தந்தை ராஜு ஆகியோரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் – இந்த நிலையில் தலையில் பலத்த வெட்டு காயமடைந்துமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் எடமலைப் பட்டிபுதூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து ராஜேந்திரன், அஞ்சலை மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாதவன், முருகானந்தம் அபி, சூர்யா சக்திவேல் குட்ட ஆறுமுகம் வெள்ளையம்மாள், தேவிகா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதை தகராறில் தொழிலாளி அருவாளால் வெற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எடமலைப் பட்டி புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணையவழி மோசடி
திருச்சியில் டிஜிட்டல் மோசடி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கே. சண்முகப்பிரியா பேசும்போது,
திருச்சியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரூ.14.43 கோடிக்கு இணையவழி மோசடி நடந்துள்ளது., அதில் ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது.
ரிசா்வ் வங்கியின் உத்தரவுப்படி தமிழக காவல்துறையுடன், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இணைந்து, டிஜிட்டல் மோசடியை தகா்ப்போம் என்னும் விழிப்புணா்வுக் கருத்தரங்கை
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா பேசும் போது,
திருச்சி நகரில் நாளொன்றுக்கு வரும் 10 மோசடி புகாா்களில், 8 புகாா்கள் இணைய வழி மோசடியாக உள்ளன.
கடந்த 8 மாதங்களில் மட்டும் திருச்சி நகரில் இணைய மோசடியால் ரூ.14.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த காவல்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து தொடா்ந்து பிரசாரம் மேற்கொள்கிறோம். சைபா் குற்றத்திற்கான மூலக் காரணம் பயம் மற்றும் விழிப்புணா்வு இல்லாமையே. டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். டிஜிட்டல் மோசடி தகா்ப்பு திட்டமானது, ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலுடன் முன்னெடுக்கப்படுகிறது.
நுகர்வோரின் நிதிப் பாது காப்பு நிதி நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நிறு வனமும் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆலோசனை களை சமூக ஊடக தளங்களி லும், மக்களுடனான நேரடி சந் திப்புகள் மூலமாகவும் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
உதவி ஆய்வாளர்கள் ஜெகதீ சன், முரளி, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும் இணைய மோசடி குறித்து விளக்கினர். இதில் நிதி நிறுவன ஊழியர்கள், தனியார் நிறுவன இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட னர்.
ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து
5 பேர் கைது…
திருச்சி ஆர்சி நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது26)ஆட்டோ டிரைவர். இவருக்கும் பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே திருச்சி _ மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆர்.சி நகர் அருகே ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 29ந்தேதி அப்துல் ரகுமான் ஆர்சி நகர் அருகே சவாரிக்காக நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பலத்த காயமடைந்த அப்துல் ரகுமான் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து கீழப்பஞ்சப்பூர் சேர்ந்த பாரதிதாசன் (வயது21, ஆனந்தபாபு (வயது 40), முருகன் (வயது 42) எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த முருகேசன் (வயது 53)மற்றும் தீரன் மாநகரை சேர்ந்த தேசிய ராஜா (வயது 24) ஆகிய ஐந்து ஆட்டோ டிரைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரதாப், செட்டி ராஜ்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.
செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கல்லக்குடியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 23). இவர் வேலை காரணமாக கடந்த 30 ந்தேதி திருச்சி வந்தார். ரெயில்வே ஜங்ஷன் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி இவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றார் , சுதாரித்துக் கொண்ட கிஷோர் குமார் கூச்சலிட்டார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம ஆராமி ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஜி (வயது 34)என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.