கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று அதிகாலை வெறி நாய்கள் கடித்ததில் 12 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளது 15 ஆடுகள் காயம் அடைந்துள்ளது.
அதேபோல் வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு புங்குத்தோட்டம் ராஜேந்திரன் என்பவர் வளத்து வந்த செம்மறி ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்துள்ளது.
மொத்தம் இரண்டு நாட்களில் 17 ஆடுகள் உயிரிழந்துள்ளது.
தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் தொடர்ந்து வெறிநாய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருவதாகவும், தமிழக அரசு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.