தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை அருள்மிகு சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஷ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து கிராம சாலை வழியாக கோவிலுக்கு வந்தனர்.
தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை கிராமத்தில் அருள்மிகு. சௌந்தரநாயகி அம்பாள் சுந்தரேஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயம் சுந்தர நாட்டிற்கு உட்பட்ட 18
கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புணரமைப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டு 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனையொட்டி, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஊர் எல்லையில் இருந்து, மயிலாட்டம், கரகாட்டம், தாரை, தப்பு இசையுன் கிராம சாலைகள் வழியாக ஊர்வலமாக கும்பாபிஷேக யாகசாலை மண்டபத்திற்கு வந்தனர். தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை துவங்கியது. யாகசாலை பூஜையை தருமை ஆதினம் துவக்கி வைத்தார்.