இன்று காலை 10:45 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் இ-மெயிலில் இந்த மிரட்டல் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கும், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடங்கள் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்திருந்தது. இந்நிலையில், 3வது முறையாக மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார் என சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.