அரியலூர் மாவட்டம் கீழப்பலுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). இவருக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயாலிசிஸ் பரிசோதனை செய்துவிட்டு காரில் இவரும் இவரது சகோதரி விஜய் லட்சுமியும்(55) கீழப்பழுவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் சாத்தமங்கலம் சர்க்கரை ஆலைத் தாண்டி வந்த பொழுது அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் காரில்
பயணம் செய்த விஜயலட்சுமி என்ற பெண்ணும் காரின் ஓட்டுனர் ஆன கீழப்பலுவூரை சேர்ந்த முரளி (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கீழப்பலுவூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் தஞ்சாவூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது