Skip to content

திருச்சியில் ரயில் மோதி லோடுமேன் பலி

திருச்சி அரியமங்கலம் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் மாரிமுத்து (வயது 32). லோடுமேன் இவர் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் 8 மணி அளவில் அங்குள்ள எம் ஆர் மில் அருகாமையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்பட்டது இது குறித்து ஜங்ஷன் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!