திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவுகளுடன் சோதனை செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளை குடியரசுத் தலைவர் திருச்சி வருகை தருவதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்
அவருடைய மின்னஞ்சலில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தாலும் அவருடைய மின்னஞ்சல் செய்தியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளதால் மனக்குழப்பத்தில் இருக்கும் நபர் யாராவது இந்த மின்னஞ்சலை அனுப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டு சோதனையால் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.
