மிலாது நபி பண்டிகையொட்டி கோவை ஜி.எம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் சார்பாக பொதுமக்களுக்கு தப்ரூக் உணவாக குஸ்கா வழங்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். மீலாது விழாவை முன்னிட்டு வருடம் தோறும் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கோவை ஜி.எம்.நகர்,பள்ளி வீதி பகுதியில்,சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் (SYF) மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து ஒண்பதாவது ஆண்டாக தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில்,கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பின் தலைவர் ராஷிதுல் உலமா மெளலவி அல்ஹாஜ் K.A.முஹம்மது அலி இம்தாதி ஹஜரத் துவா ஓதி தொடங்கி வைத்தார்.இதில் ஜாதிமதபேதமின்றி சுமார் 25000 த்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.எஸ்.ஒய்.எஃப். பொதுச்செயலாளர் கோவை பைசல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிகழ்வில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அல்ஹாஜ் M.A.இனாயத்துல்லாஹ், சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் (SYF) ன் தலைவர் மெளலவி P..K அஹமது கபீர் உலூமி,கொள்கை பரப்பு செயலாளர் மெளலவி V.I.அப்துல் ரஹ்மான் உலூமி மற்றும் கோவை மாநகர உலமா பொருமக்கள்,ஜமாஅத் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.