Skip to content

அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து

  • by Authour

தவெக தலைவர் விஜய், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (செப்.5) வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள். எம் கொள்கைத் தலைவர் காமராசரின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள். ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்; அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்; அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்; இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள்; ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

error: Content is protected !!