அரியலூர் மாவட்டம், புத்தூர் கிராமத்தில் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சு சென்ற விவசாயி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65). விவசாயி. இவர் தனது ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளார். தினந்தோறும் காலை வயலுக்கு சென்று நெல் பயிருக்கு தேவையான தண்ணீரை மின்மோட்டார் மூலம் பாய்ச்சி விவசாயம் செய்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் வயலுக்கு சென்ற விவசாயி பாலகிருஷ்ணன் முதலில் உள்ள மோட்டாரை இயக்கி விட்டு பின்னர் அடுத்த மோட்டாரை இயக்கம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை தெரியாமல் தவறுதலாக பாலகிருஷ்ணன் மிதித்த போது மின்சாரம் தாக்கி
சம்பவ இடத்திலேயே தலை குப்புற கீழே விழுந்து வயலிலேயே உயிரிழந்தார். அருகில் உள்ளவர்கள் வயலுக்கு சென்றபோது பாலகிருஷ்ணன் மின்கம்பியை மிதித்து உயிரிழந்தது தெரியவந்தது. இறந்த பாலகிருஷ்ணனுக்கு அருகிலேயே இரவில் காட்டுப்பன்றி ஒன்றும் முன் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் கீழப்பழூவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக காற்றின் தாக்கத்தால் மின்கம்பிகள் ஒன்று கொண்டு உராய்ந்து மின்கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என்றும், இரவில் வயலுக்கு வந்த காட்டுப்பன்றி மிதித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. அதை கவனிக்காமல் சென்ற பாலகிருஷ்ணனும் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி அவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடன் உடற்கூறு ஆய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மின்வாரிய துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்கு தண்ணி பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.