கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்ட ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய கதவுணையாகும் காவிரி கதவணைக்கு நேற்று காலை 25,790 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து அதிகரித்து 29,440 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதில் 27,970 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும், விவசாய பாசனத்திற்காக பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை
- by Authour
