கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில், மும்பை ரோட்டரி டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது..
கோவையில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக “கிரிக்கெட் கனவுகள், வரம்பற்ற உற்சாகம்” எனும் தலைப்பில்,தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டி சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது…
கோவை ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய இந்தப் போட்டிகளில் ஜம்மு அண்ட் காஷ்மீர், உத்தரப்பிரதேசம், புது தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரம், ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர்.
கிரிக்கெட் போட்டியை ஆர்வமுடன் விளையாடிய மாற்றுத்திறனாளிகள் பவுலிங்,பேட்டிங்,ஃபீல்டிங் என சர்வதேச தர கிரிக்கெட் போட்டிகளை கண் முன் நிறுத்தினர்..
மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போட்டிகளின் இறுதி சுற்றில், கொல்கத்தா தண்டர் வாரியார் அணியை எதிர்த்து விளையாடிய மும்பை ரோட்டரி டவுன்டவுன் டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்..
தொடர்ந்து வெற்றி பெற்ற அணி மற்றும் போட்டிகளில் சிறந்து செயல்பட்ட வீர்ர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெற்றி கோப்பை, மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.