Skip to content

திருச்சியில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு… ஒருங்கிணைக்க குழு அமைப்பு..

  • by Authour

செப்டம்பர் 15ம்  தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெறுகிறது.
மாநாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுத் திடலில் பணிகள் முடுக்கி விடப்பட்டு ஒரு வார காலமாக மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டுத் திடலில் ஜெனரேட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள், ஒளி விளக்குகள், ஆம்புலன்ஸ், கழிப்பறை வசதி, கழிப்பறைக்குரிய தண்ணீர் வசதி, குடிநீர் வசதி, மேடையில் அமைய வேண்டிய வசதிகள், காவல்துறை, தீயணைப்புதுறை முன் அனுமதி பெறுதல், அவசர உதவிக்கு மருத்துவர்கள், புகைப்பட கண்காட்சி அமைய வேண்டிய இடங்கள் குறித்தும்,
மாநாட்டு திடலில் இரு திசைகளிலும் வாகனம் நிறுத்துமிடம் குறித்தும், வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு வாக்கி டாக்கி வசதிகள், அணிகள் அமர வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட பணிகள் அனைத்திற்கும் ஒருங்கிணைப்பு குழு, கண்காணிப்பு குழு அமைத்து அக்குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் பட்டியல் குறித்து முடிவு செய்யப்பட்டது. பந்தல் சிவா மாநாட்டின் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார்.
கழகத்தைச் சார்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் செப் 16 – ந் தேதி வரை திருச்சியில் தங்கி மாநாட்டு பணிகளை கவனிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், உயர்நிலைக் குழு உறுப்பினர் சு.ஜீவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம், எஸ்.கே.கலியமூர்த்தி, எஸ்.ஜெயசீலன், க.இராமநாதன், மதுரை முனியசாமி, திண்டுக்கல் செல்வராகவன், மாநிலத் தொண்டர் அணி ஆலோசகர் பாஸ்கர் சேதுபதி, மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி கி. இராஜேந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த. ஆசைத்தம்பி, மாநில மாணவர் அணி செயலாளர் பால சசிகுமார், தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் ஆர். இரத்தினசாமி, சட்டத்துறை சார்பில் வழக்கறிஞர் பா.சுப்பாராஜ், நாடாளுமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் சதீஷ், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பெருங்குளத்தூர் கோபி, தலைமைக் கழக நிர்வாகிகள் கொடுமுடி சண்முகம், சிவகாசி குமரேசன், கவிஞர் எழிலரசன், மதுரை பூ. மணிகண்டன், ஆசிரியர் முருகன், துரை.வடிவேல், ஒன்றிய செயலாளர் மதியழகன் திருச்சி தெற்கு பா.ஜெகந்நாத், திருச்சி வடக்கு கலியமூர்த்தி, புதுக்கோட்டை வழக்கறிஞர் இராஜா ஆதிமூலம், தாமஸ் பிரிட்டோ, பொறியாளர் அணி அஜித்குமார், பெரம்பலூர் ரெங்கராஜ், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!