கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது என கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு.கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா குறித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன தாராபுரம் பகுதியில் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில்…
கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படி நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் உதயசூரியன் வென்றதோ அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலிலும் உதயசூரியன் வென்றது என்ற வரலாற்று சாதனையை உருவாக்க கூடிய வகையில் வருகின்ற முப்பெரும் விழா அடித்தளம் அமைக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்திட வேண்டும், 234 தொகுதிகளில் நடந்த உறுப்பினர் சேர்க்கையில் முதல் 10 இடங்களில் அரவக்குறிச்சியும் உள்ளது எப்படி உறுப்பினர் சேர்க்கையில் பணியாற்றினோமோ அதே போல் முப்பெரும் விழாவில் பணியாற்ற வேண்டும், முப்பெரும் விழாவில் அரவக்குறிச்சியில் இருந்து 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். கரூரிலிருந்து அதைவிட கூடுதலாக இருக்கும் அதே போல் கிருஷ்ணாபுரம், குளித்தலை ஐம்பதாயிரம் பேருக்கும் மேல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் எங்கும் இல்லாதது போல் ஒரு லட்சம் இருக்கைகள் நிரம்பி வழி நெடுகிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்திட வேண்டும் முப்பெரும் விழா என்பது நம்முடைய குடும்பம் விழா அனைவரும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பங்குபெறும் வகையில் சிறப்பை சேர்த்திட வேண்டும் என கூறினார்.