Skip to content

டூவீலர் திருட்டு.. மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.. திருச்சி க்ரைம்…

டூவீலர் திருடியவர் கைது..

ஸ்ரீரங்கம் ஜே ஜே நகரை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் 30 டீ மாஸ்டர். இவர் டூவீலரை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றார் மறுநாள் வந்து பார்த்தபோது டூ வீலர் திருடு போனது தெரியவந்தது. மற்றொரு சம்பவம் இதேபோல் திருச்சி மண்ணச்சநல்லூர் திருப்பட்டூரை சேர்ந்தவர் பாலமுருகன் 23 நேற்று ஸ்ரீரங்கம் வடக்கு உத்திர வீதி அருகே தன் டூவீலரை நிறுத்திவிட்டு சென்றார் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு மலைக்கோட்டை சறுக்கு பாறையை சேர்ந்த சுந்தர்ராஜ் 54 என்பவரை கைது செய்தனர். டூவீலர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது.

செல்போன் திருடிய வாலிபர்கள் கைது

திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சகுந்தலா தேவி (30) இவர் குழுமி கரை அருகே டூவீலரை வைத்துவிட்டு அதில் செல்போனை வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் 23 மற்றும் சுபின் 25 ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு

திருச்சி கே கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 27 எலக்ட்ரிசியன். இவர் தன் வீட்டில் கழிவறைக்கு சென்றார் அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் ஒயர் மீது கால் வைத்தார். இதில் மின்சாரம் பாய்ந்து விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

எலக்ட்ரிஷன் மர்ம சாவு

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் ( 41 ) எலக்ட்ரீசியன் திருமணமாகாதவர் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. தன் வீட்டில் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் கடந்த 6ம் தேதி அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பாலச்சந்தர் மூக்கில் ரத்தம் கசிந்தபடி இறந்த நிலையில் கடந்துள்ளார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!