தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் முன்னிலையில் தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ோலீசார் பறிமுதல் செய்த 1,000 கிலோ கஞ்சா நேற்று எரித்து அழிக்கும் பணி நடந்தது. தஞ்சாவூர் காவல் சரகத்தில் போதை பொருள்களுக்கு எதிராக போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எரித்து அழிக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது. தொடர்ந்து தஞ்சாவூர் சரக டிஐஜி., ஜியாவுல் ஹக் முன்னிலையில் அயோத்திப்பட்டியில் இந்த 1000 கிலோ கஞ்சா பாதுகாப்பாக எரியூட்டி அழிக்கப்பட்டது.
இதில் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆர்.ராஜாராம், டி.எஸ்.பிக்கள் (மதுவிலக்கு) திவ்யா, ஆனந்த்(நாகை), ராதாகிருஷ்ணன்(திருவாரூர்), அருள்மொழிஅரசு (திருவையாறு) மற்றும் வட்டார தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.